Monday, November 23, 2009

Z-tamil TV






Please double click on the video window to view in full screen.









Thursday, November 19, 2009

கண்டேன் காதலை - விமர்சனம்








விமர்சனம்:
 காதல் தோல்வியிலும், குடும்ப பிரச்சனையிலும் மனம் சோர்ந்து தற்கொலைக்கான மனநிலையில் இருக்கும் பரத், கால்போனபோக்கில் நடந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து பிளாட்பாரத்தில் நகரத் தொடங்கும் ரயிலில் ஏறுகிறார் பரத். துறுதுறு பேச்சும், கிறுகிறு சிரிப்புமாக இயல்பிலேயே "தவுசண்ட் வாலா" போல படபடக்கும் தமன்னாவும் சொந்த ஊருக்குப் போக அதே ரயிலில் ஏறுகிறார் தமன்னா. டிக்கெட் இல்லாத பரத், டி.டி.ஆரிடம் சிக்க, அவரைக் காப்பாற்றுகிறார் அம்மணி. மனம் வெறித்து பாதியில் ரயிலிறங்கும் பரத்தை பின் தொடர்கிற தமன்னாவும் ரயிலை தவறவிடுகிறார். தேனி போகவேண்டிய பெண்ணை ஊருக்கு அழைத்துப்போகிறார் பரத்.


திருவிழா காலம் என்பதால் பத்து நாள் அங்கேயே தங்குகிறார். கிராமத்துப் பின்னணி கூட்டுக்குடும்பத்தில் தமன்னாவுக்கு முறைமாமன் ‘லொள்ளு” சந்தானத்திற்கு மணம்பேசி முடிக்கிறார்கள். இதற்குள் தமன்னாவிடம் இருந்த துறுதுறுவும், சுறுசுறுவும் பரத்துக்கும் தொற்றிக்கொள்ள மனிதர் புது ஆளாக மாறுகிறார். தமன்னா வேறொருவரைக் காதலிப்பதால் வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போக முடிவு செய்கிறார். வீடு கலவரமாக, காதலன் ஊரில் தமன்னாவை விட்டுவிட்டு புது மனிதராக போய் நொடிந்து போன பிசினஸை எடுத்து நடத்தி டி.வி.யில் எல்லாம் பேட்டி கொடுக்கிறார். தமன்னாவை அவர் காதலன் ஏற்க மறுக்க, பரத் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்ய, கடைசியில் என்ன நடக்குமோ அதுவே நடக்கிறது. தமன்னாவும், பரத்தும் இணைகிறார்கள் என்பது கதை.


இயக்குனர்:
 அழுத்தமான காதலை வித்தியாசமான காட்சியமைப்பில் மனதில் பதிய வைத்துள்ளார் இயக்குனர் ஆர்.கண்ணன்.

இந்தியில் வெற்றியடைந்த ‘ஜப் வீ மெட்’ படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். கலகலவென்று சிரித்துவிட்டு வருகிற மிக அழகான காதல் கதை.  வட இந்திய வாடை இல்லாமல் தமிழ் மணம் வீச படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன். 

பரத்:

பரத்துக்கு முதல் பாதியில் அடக்கி வாசிக்கிற கேரக்டர். அடுத்தப்பாதியில் அமர்க்களப்படுதுகிற வாய்ப்பு.  இரண்டையும் அழகாக பண்ணியிருக்கிறார் .
 ‘நீ எப்படி இருக்கணும் தெரியுமா?” என்று தமன்னாவிடம் கேட்டு ‘எஸ்பிரஷன்’ காட்டுவதும், தமன்னவிடம் காதல் வந்த பிறகும் அதை கேஷுவலாக கடந்து போவது போன்ற இடங்களில் பரத் கொடுப்பது நடிப்பு ட்ரீட்..

கோட், சூட்டில் இளம் தொழில் அதிபர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் பரத்.காதலி இன்னொரு வரை மணந்ததும் நொறுங்கி சோகமாகுகிறார். தமன்னாவின் கள்ளமில்லா வெள்ளை சேட்டைகளில் ஈர்ப்பாகி மீண்டு வருவது நச்...

ஊட்டியில் காதல் தோற்று துவண்டு நிற்கும் தமன்னாவிடம் "நான் அழுதுட்டு இருந்தப்போ நீ சிரிச்சிட்டு இருந்தே. நான் சிரிக்கும் போது நீ அழுதுக்கிட்டு இருக்கே" என்று சொல்லி கண் கலங்கும் போது அழ வைக்கிறார்.


தமன்னா:

படத்தில் அழகு ராட்சஸி தமன்னாதான். பொண்ணு கண்ணும் அசத்தும் நடிப்பை வெளிப்படுத்துகிறது.  அதிலும் முதல்பாதியில் மொத்த அப்ளாசையும் தனக்கே அள்ளிக்கொள்கிறார். ’வளவள பேச்சிலும்’ இன்னும் கொஞ்சம் பேசலாமே என்றே கேட்கத் தோன்றுகிறது.


இது முழுக்க முழுக்க தமன்னாவுக்கான படம். அழகாக இருக்கிறார். ஹிந்தியில் கரீனா செய்ததை அப்படியே செய்ய முயற்சிக்கிறார். முதல் பாதியில் அடாவடியாகவும், இரண்டாம் பாதியில் அமைதியாகவும் மனதை அள்ளுகிறார்.

"நான் தேனி பொண்ணு" என்று பட பட வென பொரியும் அஞ்சலி கேரக்டரில் வாழ்கிறார் தமன்னா. ரெயில் நிலையத்தில் இரண்டு ரூபாய்க்காக கடைக்காரனிடம் சண்டையிட்டு ரெயிலை தவறவிடுவது... முறைமாப்பிள்ளையை கட்டிக்க மறுத்து ஓடுவது துறுதுறு. காதலன் கைகழுவும் போது பரிதாபபட வைக்கிறார்.



சந்தானம்:
படத்தின் அடுத்த ஹைலைட் சந்தானம். தேனியில் இருந்துக்கொண்டு ‘சென்னை’ தமிழில் வருகிற போகிறவர்களையெல்லாம் சகட்டு மேனிக்கு திட்டினாலும் சிரிக்க வைக்கிறார். ஆனால், வயசு வித்தியாசம் இல்லாமல் மனோபாலா, சிங்கமுத்து போன்ற சீனியர்களை ஏகவசனத்தில் பேசுவது ரொம்பவே இடிக்கிறது.


தன்னை மாப்பிள்ளையாக்கி திருமண வேலைகளில் ஈடுபடும் தமன்னா குடும்பத்தினரிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிப்பதும் அது நிஜமாகட்டும் என்ற சந்தோஷ உணர்வையும் ஒரு நேரத்தில் வெளிபடுத்துவது சபாஷ்.

தொழில்நுட்பம்:
முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ஹீரோ. ஊட்டி லொகேஷன்களை அள்ளிக் கொண்டு வரும்போது கூடவே குளுமையையும் கொண்டு வந்தது போல அத்தனை ஜில்!


வித்யாசாகரின் பின்னணி இசை படத்திற்குப் பலமாக இருக்கிறது. பாடல்கள் இடைவேளையாகமல் இருப்பது பெரிய ஆறுதல். "காற்று புதிதாய்", "ஓடோடிப் போறேன்" ஆகிய இரண்டு பாடல்கள் அருமை.
பாடல்களிலும், ஊட்டிக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா நன்றாகச் செய்திருக்கிறார்.
ரேம்போனின் கலை இயக்கம் படத்துக்கான ரிச் லுக்குக்கு பெரிதும் உதவுகிறது. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் அழகூட்டுகிறது

சபாஷ்:
கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பும் துறு துறுப்புமாய் நிமிர வைக்கிறது.
தமன்னாவின் நடிப்பு படத்திருக்கு உயிர்.
சந்தானம் காமெடி சாரா வெடி.
அழகான காதல கதையை படமாக்கி இருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

கவனம் தேவை:

கணவனை விட்டு ஆடிட்டருடன் ஓடிய தாயின் காதலை நியாயப்படுத்தும் சீன்கள் கலாசார பிழை.





தீர்ப்பு:
கண்டேன் காதலை – ஒரு அழகான காதலை பார்க்கலாம்
                                                                            சாரி ,   
                                                                     உணரலாம்.....!

Thursday, September 24, 2009

Life is beautiful

In this world, there are many wonders created by god for us. But we dont spend more times with the natures.
Love your life in every moment...
Live the Best!

SHAKTHI FM

Wednesday, September 23, 2009

Tuesday, September 22, 2009

உன்னை போல் ஒருவன் - திரைவிமர்சனம்

மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஒரு தொலைபேசியில், 6 இடத்தில் வெடிக்குண்டு வைத்து இருப்பதாகவும், அதை வெடிக்க வைக்காமல் இருக்க 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க படுகிறது. அரசு இதற்கு சம்மதிக்க இரண்டு போலீஸ் துணையுடன் அனுப்பி வைக்க படுகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற உடன் போலீஸ் ஒரு தீவிரவாதியை மட்டும் வைத்து கொண்டு மூன்று தீவிரவாதிகளை மட்டும் அனுப்பி வைக்க மூவரும் கொல்ல படுகின்றனர். அந்த தொலைபேசி குரல் இதை தெரிந்து கொண்டு, கடைசி தீவிரவாதியையும் போலீஸே கொலை பண்ண சொல்ல அவர்கள் என்ன செய்தார்கள், ஏன் மற்ற மூன்று பேரும் கொலை செய்ய பட்டனர் என்பதும், கடைசி தீவிரவாதிக்கு என்ன கதி என்பதும் முடிவு.....


இக்கதை ஹிந்தி திரைப்படமான "வேட்நேஸ்டே" கதை. இதையே கமல் மிக சில மாற்றங்கள் செய்து தனது பாணியில், தனது எழுத்தையும் சேர்த்து கொடுத்து உள்ள படம். இதற்காக இந்தியாவின் மிக சிறந்த நடிப்பு சிகரங்கள் ஆனா கமல்ஹசன், மோகன்லால் இணைந்து உள்ளனர்.


கமல்:
தசாவதாரம் படத்திற்கு பிறகு, தன்னுடைய சமூக எண்ணத்தை கதையின் மூலமாக சொல்வது மட்டும் இல்லாமல், வசனமாகவும் வைத்து அரசாங்கத்திற்கு தீவிரவாதத்தை பற்றி நெற்றியில் அடித்தார் போல் கூறி இருக்கிறார். தக்காளி வாங்குவதும், மடிக்கணினியை வைத்து போலீஸ் மிரட்டுவதும், ஓட்டு பதிவில் தன் பெயர் இல்லாத ஒரு சாதரண தனிநபர் என்று கூறுவதும், தீவிரவாதத்தை அழிக்க அவர் கடைசி நிமிட வசன காட்சிகள் ஆகட்டும் கமலுக்கு நிகர் கமல் மட்டும் தான் என்பதை மறுபடியும் காட்டி விடுகிறார்.


மோகன்லால்:
மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து, கமலுக்கு நானும் குறைந்தவன் இல்லை என்பதை நிரூபிக்கிறார். முடிவு காட்சியில் ஒரு சாதரண மனிதர் ஆக கமலை பார்த்து, வீட்டிற்கு போக உதவ வேண்டுமா என்று கூறும் போது மனதில் நிற்கிறார். இருவர் படத்திற்கு பிறகு இவர் இத்திரைப்படத்தில் என்பது தனி சிறப்பு தான்.. தமிழ் நாட்டு தாயரிப்பாளர்கள்/ இயக்குனர்கள் இவரை பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.


தீவிரவாதம், பெண் கொடுமை, மதவெறி என்று பல விஷயங்களை யார் மனதும் புண் படாமல், எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடாமல் வசனத்தால் புரியவைத்து, ஒரு தனி மனித கோபம் என்பது எவ்வளவு அதிபயங்கர ஆனது என்பதை காட்டி யோசிக்கவும் வைக்கிறார்...


படத்தோடு ஐயக்கியம் ஆகி விட்டதால் இசை வந்ததும்/ போவதும் தெரியவில்லை. படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ஒளிப்பதிவு.


நான் ரசித்தவை:
* தமிழ் சினிமா வரலாறில் ஒரு முன்னணி நடிகர் நடிகையே இல்லாமல் நடித்தது
* படத்திற்கு எது தேவையோ அதை மட்டும் சொல்லியது.