Tuesday, November 22, 2011

திரைவிமர்சனம்: கேஸ்ட்அவே (Cast Away)



           
                 
                             

                இந்த படத்திற்கு தமிழில் முதன்முறையாக திரை விமர்சனம் எழுதிய பெருமை எனக்கே சேரும்.


                ஒருவரின் புன்னைகை கூட நம்முடைய கண்ணீரை வரவழைக்கும் என்பதற்கு Life is Beautiful ஒரு உதாரணம் என்றல், இவரின்(Tom Hanks) அமைதி கூட நம் மனிதில் பாதிப்பை ஏற்படுடிவிடும். என் நண்பர்கள்(thanks to Ramesh & Sreekanth) பரிந்துரையின் பெயரில் தான் இந்த படத்தை பார்க்க நேர்தது. சந்தோசமாக சென்றுகொண்டு இருக்கும் ஒருவரின்  வாழ்கையில் புயல் அடிப்பதால்  ஏற்படும் பாதிப்பை அல்ல அவரின் தனிமையை சொல்லி இருபது தான் இந்த Cast Away.





   









         
     
            இந்த படத்தில் Tom Hanks நடிதிருகிறார் என்பதை விட வாழ்ந்து  இருக்கிறார் என்பது தான் சால சிறந்தது. யாரும் இல்லாத தீவில் தனியாக மாட்டிகொண்டு அவர் படும் கஷ்டம் நம் கண்களை ஈரமாக்கிறது.   சில படங்கள் சிந்திக்க வைக்கும், சில படங்கள் ரசிக்க வைக்கும், இந்த படம் நம்மளை அந்த   பாத்திரமாகவே கற்பனை கொள்ள செய்கிறது.


                   
               

           மனிதனால் பேசாம இருக்கவே முடியாது, அதனால் தான் ஒரு ValleyBall -ல் ஒரு உருவத்தை வரைந்து வைத்து கொண்டு அதனுடன் தன் துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார் Tom Hanks. நாளடைவில் அதனை ஒரு உயிருள்ள ஜீவனாகவே நினைத்து பேசும் பொது, நம்மளை அறியாமலே ஒரு பாதிப்பு வர தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, அந்த ValleyBall கடலில் அவனை விட்டு பிரிந்து போகும் பொது, அதற்காக அவன் அழும் காட்சி... நமது கண்களிலும் தான்...


         ஐந்து வருடம்  கழித்து சொந்த ஊருக்கு வரும் பொது தன் மனைவி இன்னொரு திருமண செய்து கொண்டதை பார்த்த பின், தன் நண்பனிடம் "ஐந்து வருடம் யாருமே இல்லாத தீவில் நான் மட்டும் இருக்கும் பொதும்  என் மனைவியிம் இந்த உள்ளகம் முழுவதும் என்னுடன் இருந்ததாகவே எனக்கு தோன்தியது. அனால் இப்போது எல்லாரும் இருக்கிறார்கள், இருந்தும் தனிமையில் இருப்பதாகவே நான் உணர்கிறேன்" என்று சொல்லும் பொது நம்மையே உறைய வைக்கிறது.
                 
               நிச்சயமாகவே இந்த படத்தின் பாதிப்பு இரண்டு மூன்று நாட்கள் நமை விடு போகாது. உலகத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
    


    Director:    Robert Zemeckis

    WrittenBy: William Broyles Jr.

    Actor:        Tom Hanks

    Music:       Alan Silvestri

    Year:         December 7, 2000

    Award:      58th Golden Globe Awards -Best Performance by an Actor in a Motion Picture(Tom
                       Hanks) and also nominated for Oscar Award.