Monday, November 22, 2010

DOWN FALL - சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்...


ஹிட்லரை பற்றி எனது கருத்து....
     ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் பேர்வரை யூதர்கள் இறப்புக்கு காரணமான கொடுங்கோலன் .
     உலகில் ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு காரணமானவன்.

     என் சக அலுவலகர் ஒருத்தர்(SATHISH) பரிந்துரைத்ததால், இந்த படத்தை பார்த்தேன். அப்போது தான் அந்த( ஹிட்லர்) மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது... உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை பார்த்த  போது... ஹிட்லர் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது.... இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன...

    50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நான் வைத்து இருந்த பிம்பம் இந்த படத்தை  பார்கையில்  கொஞ்சம் மாறி இருந்தது.. தொழில் துறையிலும் ஜெர்மன் வளர்ச்சிக்கு ஹிட்லர்  ஆற்றிய பங்கு என்ன? என்று வாசித்த(Refer From Book) போது வேறு பார்வை எனக்கு வந்தது நிஜம்...




     நான்தான்... நான்தான் என்று இருமாப்புடன் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்.... முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய்., இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை (Fuhrer - பீயூரர்)வழி நடத்துபவர் என்று அழைக்கபட்டார்.... என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...
     இதுவரை இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன... அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்.... மிக முக்கியமாக... ஐ சர்வடு கிங் ஆப் இங்கிலாந்து படமும், லைப் ஈஸ் பீயூட்டிபுல்(Life is Beautiful) படமும் , ஸ்பீல்பெர்க்கின் ஷின்டலர்லிஸ்ட் என்று அடுக்கி கொண்டே போகலாம்....


     ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றியை ருசித்தவன்... அவனுக்காக தலையை சீவிக்கொண்டு கொத்து கொத்தாக இறக்க கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்??? உலகத்தின் பிதா நான் தான் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கைதானே... அதுதான் ஹிட்லருக்கும் தோன்றியது..


     ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது... காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

     ஒரு வாததிற்கு கோட்சேவின் கடைசி இரண்டு நாட்களை மட்டும் படமாக எடுத்தால், அதை வரலாறு தெரியாத ஒருவர் பார்க்கும் போது வெறும் பரிதாபமே மிஞ்சும், ஒரு எடுத்துக்காட்டுக்காக தான் இந்த உதரணம் மற்ற படி கோட்சேவை வெறும் தீவீரவாதியாக நான் குறிப்பிட வில்லை. கமல் கூறியது போல, புலியோட இடத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் நியாயம் புசெயலும் விமர்சணத்திற்க்கு அப்பாற்பட்ட தல்ல.

இரண்டாம் உலக போரை ஹிட்லர் தொடங்காமல் அதற்க்கு முன் அவர் இறந்திருந்தார், இன்று உலகம் அவரை  கொண்டாடியிருக்கும் விதமே வேறு.



DOWN FALL  படத்தின் கதை:
      ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.. ஹிட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்.... ஹிட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன் தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி(Fourth Army) என்ன செய்து கொண்டு இருக்கின்றது? என்று கேட்டு கத்துவதில் இருந்து... தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு, புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..

     எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் ஹிட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது....சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம்(End of Life) எப்படி இருந்து இருக்கும்? அது நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்....

     தீவிரவாதி, ஒய்பெர்ஸ் சண்டயில் 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி,ஓவியன்,அரசியல்வாதி,மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ்(Non-Veg ) சாப்பிடாதவன் என்ற பன்முக தன்மை கொண்ட ஹிட்லரின் கடைசி காலத்தை பற்றி அறிய இந்த படத்தை பார்க்கவும்....

வாழ்வில் இந்த படத்தை தவறாமல் பார்ககவேண்டிய படம் இது....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

     ஒரு வரலாற்று படத்தை எடுக்க போகின்றோம் என்றால் அதுக்கு நிரம்ப பொறுமையும், ஆராய்ந்து உண்மைகனை தெரிந்து கொள்ள வேண்டும்... பட்ஜெட் இல்லை என்று எந்த சப்பை காரணமும் சொல்லாமல் ஷாட் வைக்க வேண்டும்... எங்கேயும் காம்பரமைஸ் ஆக கூடாது... இந்த படம் முழுவதும் இதனை நாம் உணரலாம்.

     எனென்றால் ரஷ்ய படைகள் நெருங்கிய போது அவர்கள் கைக்கு எந்த ஆதாரமும் கிடைத்துவிடாமல் இருக்க எல்லாத்தையும் தீயிட்டு கொளுத்த சொன்னவன்... அந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு ஹிட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும், அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை(No Change)... அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்(Brilliant Screenplay)...


     ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல்  கொடுத்து பதுங்கு குழியில் இருக்கும் போது கூட மெடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்... அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே???...

     தளபதிகள் போர் நிலவரத்தை சொல்ல பரபரப்பாய் கேமரா அவர்களோடு கேமரா டிராவல் ஆவது, நம்மையும் அந்த கூட்டத்தில் ஒருவனாக உணரவைக்க செய்த முயற்சிகள்.
      ஹிட்லர் இறக்கும் வரை சிம்ம செப்பனம்தான்....

     ஹிட்லருக்கு பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம்னு இருக்கற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும், அந்த ஒருத்தன் சாகும் போது கூட  ஜெர்மனி யும் ஹிட்லரையும்(ஹிட்லர் மேல் உள்ள பக்தி) வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....

கேமராமேன் Rainer Klausmann யை கோவில் கட்டி கும்பிட வேண்டும்.. பதுங்கு அறை செட்டில் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவது, நிற்பது நடப்பது என பல செய்கின்றது... எந்த இடத்திலும் பிரேமில் வைத்த லைட் கூட தெரியாமல் எடுத்தது அருமை... அதே போல் எல்லா காட்சிகளும் ஹேன்ட்ஹெல்ட் ஷர்ட்டுகள்தான்... பதுங்கு அறையில் டிராலி(Movable Machine Camera ) உபயோகபடுத்தியது போல் எனக்கு நியாபகம் இல்லை...

     செட் போட்ட ஆர்ட் டைரக்டர் சம்மா சொல்ல ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்....


     நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது ரகசிய அறையில் உட்கார்ந்து கொண்டு...  "அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது" என்று வியாகியானம் பேசுவது ஹிட்லரின் சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும்(Survivel of  Fittest) காட்டுகின்றது....

     ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல் தந்து அவர்களை ஊக்கு விப்பதும் அவர்கள் பெருமை அடைவதும் அந்த கால நிகழ்வை அப்பட்டமாக காட்டக்கூடிய காட்சிகள்...

     எந்த உதவியும் இல்லாமல் எந்த கம்யூனிகேஷனும் இல்லாமல் பல வீரர்ர்கள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

     இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்து பதுங்கு மாளிகையில் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை ஆடவிட்டு வேடிடிக்கை பார்பது - போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....

     இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.... ஒரு வரலாற்று ஆவணம் இந்த படம்....

Bruno Ganz ஹிட்லராக வாழ்ந்து இருக்கின்றார்...  ஹிட்லர் மற்றவர்கள் மீது   எரிந்து விழும் கோபத்தை(What an acting that...)  நீங்கள் ரசிக்கலாம், அவர் சாப்பிடும் போது கை ஆடிக்கொண்டே இருக்கும் மேனாரிசத்தை நீங்கள் பார்க்கலாம்... முன் பக்கம் விழும் முடியை கோதி விடுவதை ரசிக்கலாம்... அதிலும் "இந்த உலகத்தை தூய்மை படுத்த வேண்டும் என்று தான் நினைதேன். அதை ஏன் இந்த மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" என்று இறக்கும் முன் அப்பாவியாக ஹிட்லர் கேட்கும் போது பாராட்டுகளை அள்ளுகிறார்.

     இறக்கும் முன் எல்லோருக்கும் கை கொடுத்து விட்டு சிலநிமிடங்கள் அந்த மிடுக்கு குறையாமல் பேசுவது அற்புதம்....

     இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்துகொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்துகொள்ள அந்த ஒரு காட்சி போதும்...

     இன்னும் சில மணி நேரத்தில் ரஷ்ய படையினர் வந்து விடுவார்கள் என்பதை யார் ஹிட்லரிடம் சொல்வது என்று பயந்து கொண்டு இருக்குங்ம தளபதிகள்... அதே போல் எல்லலா இடத்திலும் இருக்கும் அல்லக்கைகள் போல் ஹிட்லர் பக்கத்தில் இருந்ததும் கொடுமை....

     கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது... ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக ஹிட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது எந்த அளவுக்கு ஒரு தலைவனாக தனது பேச்சால் கட்டி போட்டு இருக்கின்றான் என்று நினைக்கும் போது ஆச்சர்யம் மேலோங்கி இருக்கின்றது...

     ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாள் கழித்து கூட பல படைதளபதிகள் தற்கொலை செய்து கொள்வதும், ஜெர்மனிக்காக உயிர்விட்டு விசுவாசத்தை காட்டுவதும் கொடுமை...

      இந்த படம் பெஸ்ட் பாரின் பிலிமுக்கான ஆஸ்கார் அவார்டு வாங்கியது... இந்த படம் ஜெர்மன் படம்...

     ஹிட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது...

     இந்த படம் பார்த்த பின்பு ஹிட்லரை ரசிப்பீர்கள்.. அதுதான் இந்த படத்தின் பலம்


படத்தின் டிரைலர்...


 படக்குழுவினர் விபரம்....

Directed by Oliver Hirschbiegel
Produced by Bernd Eichinger
Written by Joachim Fest
Bernd Eichinger
Traudl Junge
Melissa Müller
Starring Bruno Ganz
Alexandra Maria Lara
Corinna Harfouch
Ulrich Matthes
Juliane Köhler
and
Thomas Kretschmann
Music by Stephan Zacharias
Cinematography Rainer Klausmann
Editing by Hans Funck
Distributed by Constantin Film
Newmarket Films (English subtitles)
Release date(s) September 16, 2004 (Germany)
February 18, 2005 (USA)
Running time Theatrical cut:
155 minutes
Extended cut:
178 minutes
Country Germany
Italy
Austria
Language German
Russian
Budget €13.5 million[1]
Gross revenue $92,180,910[1]


Wednesday, July 14, 2010

மதராசபட்டினம் - விமர்சனம்


                  வெள்ளைக்கார பெண், இந்திய ஏழை ஆண் இவர்கள் இருவருக்குமிடையே காதல், சுதந்திர இந்தியா காலத்தின் பின்னணியில் பெரிதாய் என்ன இருந்திருக்க முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பும், அவர்களது நிஜமாகவே புத்திசாலித்தனமான டீஸ்ர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தது.

      இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம். ஆரம்ப காட்சிகளில் டைட்டானிக்கை ஞாபகப்படுத்தினாலும், மெல்ல, மெல்ல, பழம் பெரும் சென்னையை கண் முன்னே விரித்து, அதில் வரும் கேரக்டர்களில் ஒருவராய் நம்மை படத்தினுள் நுழைத்துவிடுகிறார்கள்.

                 

                      தற்காலத்தில் லண்டனில் 
ஏமியிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. மெல்ல அன்போல்ட் ஆகி 1947 வாழ்ந்த, காதலித்த பரிதியை தேடி, அவன் கொடுத்த தாலியை அவனிடம் சேர்ப்பதற்காக, என்றோ ஒரு காலத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவாய் ப்ளட் க்ளாட் ஆகி உயிருக்கு ஆபத்தான ஆபரேஷனுக்கு முன் பரிதியை சந்திப்பதற்காக இந்தியா வருகிறாள் ஏமி. அவளின் தேடலை, முன்னும், பின்னும் போகும் திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள்.


                     படத்தின் முதல் பாகம் சுமார் 1.40 நிமிடங்கள் போகிறது. வெள்ளைக்கார கவர்னர் பெண்ணுக்கும், சலவை தொழிலாளிக்கு இடையே ஏற்படும் காதலை உருவாக்க, மெல்ல,மெல்ல, அதற்கான சினிமா லாஜிக்கோடு, ஏற்படுத்தி, அவன் மீது அவளுக்கு காதல் ஏற்படுவதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்ல அவ்வளவு நேரம் தேவைதான் படுகிறது.
                       இதற்கிடையில் பழைய மதராசபட்டினத்தையும், ஆளும் வெள்ளைகாரர்களுக்கும், இவர்களுக்குமிடையே எழும் ப்ரச்சனை, அவர்களது வாழ்க்கை, சுதந்திரத்தை பற்றிய அன்றைய மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பு, எதிர்ப்பு, நேதாஜியை பாலோ செய்யும் குஸ்தி வாத்தியார், சுதந்திரம் வந்திட்டா மட்டும் என்ன பெரிசா கிடைச்சிரப் போவுது என்று அங்கலாய்க்கும் நொள்ளைக்கண் தகப்பன், இருக்கிற ஒரே மரத்தடி வாத்தியார், எப்பபார் தூங்கிக் கொண்டேயிருக்கும் ஒருவன், பரிதியின் நண்பர் குழாமிலிருக்கும் ஊமை, தெலுங்கு பேசுபவன், ஏரோப்ளேன் போனால் குண்டு போடப்போறாங்க என்று கத்தியபடி அலைபவன், எதுவும் நடக்காது என்று அம்மா சொன்னதாக சொல்லும் பரிதியின் தங்கை, போட் ஓட்டும் தாத்தா, தீவிரவாதம் செய்யும் ஒரு குழு தலைவன், துபாஷி ஹனிபா என்று பார்த்து, பார்த்து கேரக்டர்களை நுழைத்து, சுதந்திரத்துக்கு முன் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் ஆசாபாசங்கள் என்று மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.


                        ப்ரிதியாக ஆர்யா, நிறைவான நடிப்பு, கண்களில் குறும்புடன், வாத்யார் வீட்டின் வாசலில் வந்து நின்று நன்றி சொல்வதற்கு என்ன சொல்வது என்று நண்பர்களுடன் கும்பலாய் கேட்பதும், உள்ளேயிருந்து முனகலாய் மனைவி யாருங்க என்பதும், பின்பு மீண்டும் ஒரு முறை பகலில் கதவு தட்ட, அதே முனகலுடன் மனைவி கூப்பிட, பகல்லேயேவா? என்றபடி மீண்டும் கொரஸாய் கேள்வி எழுப்புமிடத்திலும், வாத்யாரிடமே ஆங்கிலம் தப்பாய் சொல்லித்தருகிறாய் என்று பேசுமிடத்திலும், ஆக்ரோஷமாய் குஸ்தி போடுமிடத்திலும், காணாமல் போன காதலியை தேடி அலைந்து பார்த்தும் ஒரு கணம் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல் அடிக்கும் காட்சிகளிலும் அடக்கி வாசித்திருந்தாலும் மனதில் நிற்கும் ந்டிப்பு. நிச்சயமாய் ஆர்யாவுக்கு ஒரு மைல் கல் படம் இது.

                     என்னதான் ஆர்யா, பழைய மதராஸை திரும்ப காட்டியிருந்தாலும், இது முழுக்க, முழுக்க கதாநாயகியின் படம். பார்த்த மாத்திரத்திலேயே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டு காதலிக்க வைக்கும் முகமும், நடிப்பும் இல்லாவிட்டால் படமே விழுந்துவிடக்கூடிய அபாயம் உள்ள கதை. எமி ஜாக்ஸனின் அழகும், அவரது நடிப்பும் அவரை காதலிக்க வைக்கிறது. அவரின் முகத்தில் உள்ள ஒரு இன்னொசென்ஸே, நம்மை இன்னும் கவர்கிறது.

           நீ.....
                 கம்பனால் 
                 மறைக்க பட்ட 
                                    கவி சோலை
                 காளிதாசால் 
                 செதுக்கப்பட்ட 
                                    ஓவிய சிலை

          நீ ...
                பேசும் 
                கொஞ்சும் தமிழுக்கே 
                ஆயிரம் கவிதைகள் 
                எழுதலாம்
                                அப்படி என்றால்
                நித்தம் பேசிய 
                உன் கண்களுக்கும் 
                                 எத்தனை...? 


                       படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். லண்டனில் படம் ஆரம்பத்திலிருந்து சென்னைக்கு வந்து, மதராச பட்டனத்துக்கு போய் வருவது என்று அட்ட்காசமான விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்கள்.

               ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரும், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவும். பழைய செண்ட்ரல், அங்கே ஓடும் கூவம் நதி, ட்ராம்கள், கைரிக்‌ஷாக்கள், பின்னணியில் நடமாடும் மனிதர்கள், அந்த டோபிகானா, கார்கள், என்று ஒவ்வொன்றிலும் பார்த்து, பார்த்து செய்திருக்கிற இவர்களின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.



                     படத்தில் இன்னொரு முக்கிய பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். மிக அருமையான பின்னணி இசை. வாம்மா துரையம்மா, அந்த எம்.எஸ்.வி பாடல், காதல் துளிர்க்கும் அந்த உதித் நாராயன் பாடல் என்று படத்தோடு இணைந்து ரசிக்க வைக்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் ஜி.வி.
இவர்கள் எல்லோருக்கும் சிகரமாய் பாராட்டப்படவேண்டியவர் இயக்குனர் விஜய். முந்தைய படங்களான க்ரீடம், பொய் சொல்லப் போறேன் போன்ற படங்களிலிருந்து முழுவதும் வேறு பட்ட கதைகளத்தை எடுத்து கொண்டிருக்கிறார்.

                      வழக்கமாய் சுதந்திர போராட்ட காலத்தை எடுத்துக் கொண்டு அதை பற்றி சொல்லாமல் அந்த காலத்தில் ஒரு காதலர்களுடய கதையை எடுத்துக் கொண்டு அருமையாய் சொல்லியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் மனம் நெகிழ்ந்து வெளிவராமல் இருக்க முடியாது. நானெல்லாம் அழுது பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாய் அழுதது மலையாள “தன்மாத்ரா”வுக்குதான். மிக சின்ன கேரக்டர்களுக்கு கூட டீடெயிலிங் கொடுத்து, கடைசி வரை பரிதியை தேடி அலையும் போது அதற்கான சஸ்பென்ஸோடு திரைக்கதையை நகர்த்தி சென்றதும், முதல் பாதியில் காதலுக்கு கொடுத்த வேகத்தை இரட்டிப்பாக ஆக்‌ஷன் ப்ளாக்காக மாற்றி பரபரக்க வைத்து, குப்பென நெகிழ வைத்து மிரட்டியிருக்கிறார். இயக்குனர்.

                  இப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு பாராட்டுக்கள். ஒரு வித்யாசமான படத்தை கொடுத்ததற்காக. படத்தில் குறையாய் இருக்கிற சில விஷயங்கள் இருந்தாலும் மிக குறைவே. ஆங்காங்கே டைட்டானிக், லகான், படம் போன்ற காட்சிகள், கொஞ்சம் லெந்தான முதல் பாதி, இரண்டாவது பாதியில் வரும் முதல் பாடல் என்பது போன்ற சிறு சிறு குறைகளே.. இப்படத்தின் குழுவினரின் டெடிக்கேஷனுக்கு இதெல்லாம் சாதாரணமே.. கண்டிப்பாக படம் பார்த்துவிட்டு வரும் போது மனதில் நிற்கும் படம். .




ஆழமான கடலில்
அழகான காதல்
                                                                -- டைட்டானிக்
அழுத்தமான 
விடுதலை போராட்டத்தில் 
ஆழமான 
காதல் போராட்டம்  
                                                          -- மதராசபட்டினம்



Wednesday, March 17, 2010

திரை விமர்சனம்: லைப் இஸ் பியூடிபுள்


              தமிழ் மொழியல்லாத படங்களுக்கும்   எனக்கும்  இடையே  உள்ள  தொலைவு  சற்று அதிகம். ஆனால் கமல்ஹாசன்  மற்றும்  மணிரத்னம்  இருவருக்கும்  ஒரு  இத்தாலி  மொழி  படம்  அதிக  பாதிப்பை  ஏற்படுத்தியது  என்று நான் கேள்விப்பட்ட போது நானும் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன் 
அந்த படத்தைப் பார்த்த(இங்கிலீஸ் சப்டைட்டில்ஸோடு) பிறகு எனது பாதிப்புகள் இங்கே விமர்ச்சனகளாக....!


             1999ல் வெளியான இத்தாலிய திரைப்படமான  Vita è bella, La (Life is Beautiful), மிக அழுத்தமான படம். வன்மம், குரோதம், கொடுமை நிறைந்த ஹிட்லரின் மரண மூகாமில் தன் மகனை காப்பாற்ற துடிக்கும் ஒரு யூத தந்தையின் கதை.



                சில படங்களுக்கு  முழுக் கதையைச் சொன்னாலும் பார்க்கும் அனுபவத்துக்கு சிறிதும் பங்கம் வராது, இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்தது. படத்தின் டைரக்டர் ராபர்ட்டோ தான் கதாநாயகனும் கூட.  இந்த விஷயம் எனக்கு படம் பார்த்து முடித்த பிறகு தான் தெரிந்தது..! பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் டைரக்டரின் "இது ஒரு எளிமையான கதை ஆனால் சொல்வதற்க்கு மிகவும் கஷ்டமான கதை" என்று சொல்வார். முற்றிலும் உண்மை.

             
             
               வாழ்க்கை அழகாக ரசித்து வாழும் யூத இளைஞன் குய்டூ(GUIDO) ஒரு யூதர்(JEWS). அவனால் யாரையும், எந்த சூழ்நிலையிலும் சிரிக்க வைக்க முடியும். மிகவும் வேடிக்கையான பேர்வழி. அப்படிப்பட்டவன் ஒரு நாள் சைக்கிலில் செல்லும் போது இத்தாலி பெண்ணான டோராவை(DORO) பார்த்ததும் காதல் கொள்கிறான். தனது நகைச்சுவை திறமையால் கதாநாயகியை கவர்ந்து விடுகிறார். டோரா வேறு ஒருவனுடன் நிச்சயமாகியிருந்தாலும், குய்டூ வேடிக்கை செயல்களால் கவரப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் அவனை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறாள். அவர்களுக்கு 'ஜோஷூவா'(JOSHUA) என்ற மகன் பிறக்கிறான்.






               
           
            சந்தோஷமாக ரசித்து வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் இரண்டாம் உலகப் போரின் பிண்ணனியில் ஹிட்லரின் நாஜி படைகள் நுழைகிறது.பல யூதர்கள் நாஜி படையினர்களால் கைது செய்யப்படுகிறார்கள். அதில், குய்டூ, அவன் மகனும் ஜெர்மனியர்களால் இழுத்து செல்லப்படுகிறார்கள். நாஜி படையினர் டோராவை(NOT JEWS )அழைத்து செல்ல மறுக்கின்றனர். ஆனால், அவள் தன் கணவன், மகனை விட்டு பிரிய முடியாமல் யூத கைதியாக அவளும் செல்கிறாள்.யூதர்களின் கேம்பில் குடும்பத்தோடு மாட்டிக் கொள்கிறார்கள்.
            


               ஆண்கள் பிரிவு சிறையில் குய்டுவும், அவன் மகன் ஜோஷ்வாவும், பெண்கள் பிரிவு சிறையில் டோராவும் அடைத்து வைக்கப்படுகின்றனர். நாஜி படை கொடுமையின் நடுவில் தன் மகன் பயப்படாமல் இருக்க, " நடப்பது எல்லாம் ஒரு விளையாட்டு, நாம் அனைவரும் டாங்க்(Because Joshua like Tank vey much) வண்டிக்காக போட்டி பொடுகிறோம்" என்று சொல்லி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறான்.பையனுக்கு அந்த கேம்பின் விளைவுகளோ கொடுமையோ தெரியாமல் இருக்க திரும்பவும் தனது நகைச்சுவை திறனை கொண்டு அது ஒரு விளையாட்டு என்று நம்ப வைக்கிறார்.

       
        ரஷ்யப் படை முன்னேறிவரும் சமயத்தில்,  குய்டூ தன்   மகனோடு தப்பி  செல்ல முயற்சி செய்கிறான். மகனை ஒரு பெட்டியில் இருக்க சொல்லி விட்டு, அவன் நாஜி படையினரிடம் மாட்டி கொள்கிறான். மகனிடம், "பெட்டியில் இருந்து வெளியே வந்தால், விளையாட்டில் தோல்வியடைந்து விடுவோம்" என்று சொன்னதால், அந்த சிறுவன் தந்தை இழுத்து(FOR KILL) செல்வதை அரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
 
            குய்டூ சுட்டு கொள்ளப்படுகிறான்.  ரஷ்ய படை(Hitler defeated) வரவால், டோரா தன் மகனோடு சேருகிறாள்.





குய்டூ(GUIDO):

       குய்டூவாக நடித்தவர் ராபர்டோ பெனிங்னி. அவரே கதை, இயக்கம் செய்திருக்கிறார். கொடூரம் நிறைந்த இடத்தில் ஒருவனால் சிரிக்க வைக்க முடியும் என்பதை காட்டி நம் மனதை ஆள்கிறான். இந்த வித்தியாசமான சிந்தனைக்கே அவரை எவ்வளவு ஆண்டு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

         படம் ஆரம்பிக்கும் வேகத்திலேயே டைரக்டர் மிகவும் கைதேர்ந்தவர் என்று புரிந்துவிடுகிறது. அவரே நாயகனாக புகுந்து விளையாடியிருக்கிறார். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் எழுத முடியாது படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். சப் டைட்டில்ஸ் உதவியோடு இவ்வளவு ரசிக்க முடிகிறதே இத்தாலிய மொழி தெரிந்திருந்தால் முழுதாக ரசித்திருக்கலாமே என்று தான் எனக்குத் தோன்றியது.



           ராபர்டோ ஸ்க்ரீன் ப்ளேயை மிகவும் திறமையாக கையாண்டிருக்கிறார். படத்தில் போர்க் காட்சிகள் கிடையாது, அருவருக்க வைக்கும் துன்புறுத்தும் காட்சிகளோ, பிழியப் பிழிய அழவைக்கும் காட்சிகளோ எதுவும் கிடையாது. ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே நம்மை உறைந்து போக வைக்கிறார். இந்தப் படம் போரைப் பற்றியோ அல்லது யூத ஹோலோகாஸ்டைப் பற்றியதோ அல்ல. ஒரு குடும்பத்தின் இணக்கம் பற்றியது. ஒரு தந்தையின் உணர்வைப்பற்றியது. ஆனால் யூத ஹோலோகாஸ்டின் பிண்ணனியில் பின்னப் பட்டிருக்கும் இந்தக் கதை, படம் பார்த்த ஒரு வாரத்துக்காவது பார்ப்பவர்களைப் பாதிக்கும். படமெடுப்பவர்களுக்கு இந்தப் படத்தில் ஓவ்வொரு சீனிலும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.

           இதில் ஒரு காட்சியில் ராணுவ அதிகாரி சொல்வதை அப்பாவாக நடிப்பவர் மொழிபெயர்ப்பார் பாருங்கள. நகைச்சுவை என்று அதைத்தான் சொல்ல வேண்டும். அத்தனை சோகமான கதையை அருமையாக இயக்கிய இயக்குனருக்கு என்ன விருது தந்தால் தகும். மகனை ஒளிந்து கொள்ளச்செய்து காப்பாற்றி விட்டு, கடைசியில் நாசி வீரர்கள் தன்னை கொல்ல அழைத்துச்செல்லும் போது வீரநடை போடும் அப்பா கேரக்டர். வாழ்க்கையில் மறக்க முடியாத பாத்திரம்.

டோரா(DORO)::

  
முதல் பாதியில் அழகான தேவதையாகவும், இரண்டாவது   கைதியுடையிலும் . கணவன், மகன் பிரிந்த சோகத்தை கண்களே காட்டி நடித்திருக்கிறார். இவளின் புன்னகை பூக்களாய்  உதிர்கிறது.  இவள் பேசும் வார்த்தைகளை விட புன்னகையால் பூக்கும் மலர்களும்(First Half)கண்களால் ஏற்படுத்தும் ரணைங்களும்(Second Half) தான் அதிகம்.





ஜோஷ்வா:

ஜோஷ்வா   வரும் சிறுவன் அழகாகவும் இருக்கிறான். தந்தை சொல்லும் எல்லாம் பொய்யையும் அப்படியே நம்பும் போது நம் கண்கள் நம்மை அறியாமல் கலங்குகிறது. 
தன் தந்தையின் கடைசி பயணம் என்று கூட அறியாமல், ஜோஷ்வா இதழ்களில் அரும்பும் புன்னகை நம் கண்களில் ரணத்தை வரவைக்கிறது.   களத்தூர்  கண்ணமாவில் கமல்ஹாசனை பார்த்த மாதிரியே இருக்கிறது.

 ......" என் பாதிப்புகளில் சிலவற்றை தான், நான் இங்கு எழுதி இருகிறேன். மற்றவை....? வார்த்தைகளை தேடி கொண்டு இருகிறேன்.....


அழகான முதல் பாதியை 'யூத்' படத்தில் இவ்வளவு கேவலமாக எடுதிருக்கிறார்களா என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமா எந்த நல்ல படத்தை விட்டு வைத்திருகிறது.

சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள் அருமையான படம்.


அழகான படத்தை,
 சாரி
வாழ்க்கையை..
காண(வாழ) தவறாதீர்கள்..!