Monday, November 23, 2009
Thursday, November 19, 2009
கண்டேன் காதலை - விமர்சனம்
விமர்சனம்:
காதல் தோல்வியிலும், குடும்ப பிரச்சனையிலும் மனம் சோர்ந்து தற்கொலைக்கான மனநிலையில் இருக்கும் பரத், கால்போனபோக்கில் நடந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து பிளாட்பாரத்தில் நகரத் தொடங்கும் ரயிலில் ஏறுகிறார் பரத். துறுதுறு பேச்சும், கிறுகிறு சிரிப்புமாக இயல்பிலேயே "தவுசண்ட் வாலா" போல படபடக்கும் தமன்னாவும் சொந்த ஊருக்குப் போக அதே ரயிலில் ஏறுகிறார் தமன்னா. டிக்கெட் இல்லாத பரத், டி.டி.ஆரிடம் சிக்க, அவரைக் காப்பாற்றுகிறார் அம்மணி. மனம் வெறித்து பாதியில் ரயிலிறங்கும் பரத்தை பின் தொடர்கிற தமன்னாவும் ரயிலை தவறவிடுகிறார். தேனி போகவேண்டிய பெண்ணை ஊருக்கு அழைத்துப்போகிறார் பரத்.
இயக்குனர்:
அழுத்தமான காதலை வித்தியாசமான காட்சியமைப்பில் மனதில் பதிய வைத்துள்ளார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
இந்தியில் வெற்றியடைந்த ‘ஜப் வீ மெட்’ படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். கலகலவென்று சிரித்துவிட்டு வருகிற மிக அழகான காதல் கதை. வட இந்திய வாடை இல்லாமல் தமிழ் மணம் வீச படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன்.
பரத்:
பரத்துக்கு முதல் பாதியில் அடக்கி வாசிக்கிற கேரக்டர். அடுத்தப்பாதியில் அமர்க்களப்படுதுகிற வாய்ப்பு. இரண்டையும் அழகாக பண்ணியிருக்கிறார் .
‘நீ எப்படி இருக்கணும் தெரியுமா?” என்று தமன்னாவிடம் கேட்டு ‘எஸ்பிரஷன்’ காட்டுவதும், தமன்னவிடம் காதல் வந்த பிறகும் அதை கேஷுவலாக கடந்து போவது போன்ற இடங்களில் பரத் கொடுப்பது நடிப்பு ட்ரீட்..
கோட், சூட்டில் இளம் தொழில் அதிபர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் பரத்.காதலி இன்னொரு வரை மணந்ததும் நொறுங்கி சோகமாகுகிறார். தமன்னாவின் கள்ளமில்லா வெள்ளை சேட்டைகளில் ஈர்ப்பாகி மீண்டு வருவது நச்...தமன்னா:
படத்தில் அழகு ராட்சஸி தமன்னாதான். பொண்ணு கண்ணும் அசத்தும் நடிப்பை வெளிப்படுத்துகிறது. அதிலும் முதல்பாதியில் மொத்த அப்ளாசையும் தனக்கே அள்ளிக்கொள்கிறார். ’வளவள பேச்சிலும்’ இன்னும் கொஞ்சம் பேசலாமே என்றே கேட்கத் தோன்றுகிறது.
இது முழுக்க முழுக்க தமன்னாவுக்கான படம். அழகாக இருக்கிறார். ஹிந்தியில் கரீனா செய்ததை அப்படியே செய்ய முயற்சிக்கிறார். முதல் பாதியில் அடாவடியாகவும், இரண்டாம் பாதியில் அமைதியாகவும் மனதை அள்ளுகிறார். "நான் தேனி பொண்ணு" என்று பட பட வென பொரியும் அஞ்சலி கேரக்டரில் வாழ்கிறார் தமன்னா. ரெயில் நிலையத்தில் இரண்டு ரூபாய்க்காக கடைக்காரனிடம் சண்டையிட்டு ரெயிலை தவறவிடுவது... முறைமாப்பிள்ளையை கட்டிக்க மறுத்து ஓடுவது துறுதுறு. காதலன் கைகழுவும் போது பரிதாபபட வைக்கிறார்.
படத்தின் அடுத்த ஹைலைட் சந்தானம். தேனியில் இருந்துக்கொண்டு ‘சென்னை’ தமிழில் வருகிற போகிறவர்களையெல்லாம் சகட்டு மேனிக்கு திட்டினாலும் சிரிக்க வைக்கிறார். ஆனால், வயசு வித்தியாசம் இல்லாமல் மனோபாலா, சிங்கமுத்து போன்ற சீனியர்களை ஏகவசனத்தில் பேசுவது ரொம்பவே இடிக்கிறது.
தன்னை மாப்பிள்ளையாக்கி திருமண வேலைகளில் ஈடுபடும் தமன்னா குடும்பத்தினரிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிப்பதும் அது நிஜமாகட்டும் என்ற சந்தோஷ உணர்வையும் ஒரு நேரத்தில் வெளிபடுத்துவது சபாஷ்.
தொழில்நுட்பம்:
முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ஹீரோ. ஊட்டி லொகேஷன்களை அள்ளிக் கொண்டு வரும்போது கூடவே குளுமையையும் கொண்டு வந்தது போல அத்தனை ஜில்!
வித்யாசாகரின் பின்னணி இசை படத்திற்குப் பலமாக இருக்கிறது. பாடல்கள் இடைவேளையாகமல் இருப்பது பெரிய ஆறுதல். "காற்று புதிதாய்", "ஓடோடிப் போறேன்" ஆகிய இரண்டு பாடல்கள் அருமை.
பாடல்களிலும், ஊட்டிக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா நன்றாகச் செய்திருக்கிறார்.
ரேம்போனின் கலை இயக்கம் படத்துக்கான ரிச் லுக்குக்கு பெரிதும் உதவுகிறது. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் அழகூட்டுகிறது
சபாஷ்:
கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பும் துறு துறுப்புமாய் நிமிர வைக்கிறது.
தமன்னாவின் நடிப்பு படத்திருக்கு உயிர்.
சந்தானம் காமெடி சாரா வெடி.
அழகான காதல கதையை படமாக்கி இருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
கவனம் தேவை:
கணவனை விட்டு ஆடிட்டருடன் ஓடிய தாயின் காதலை நியாயப்படுத்தும் சீன்கள் கலாசார பிழை.
தீர்ப்பு:
கண்டேன் காதலை – ஒரு அழகான காதலை பார்க்கலாம்
சாரி ,
உணரலாம்.....!
Labels:
திரை விமர்சனம்
Subscribe to:
Posts (Atom)





